பெற்றோரின் இனிஷியல் மட்டும் போட்டுக்கொள்வதற்கு பதிலாக முழு பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம்! யமுனா சின்னத்துரை!

 
பெற்றோரின் இனிஷியல் மட்டும் போட்டுக்கொள்வதற்கு பதிலாக முழு பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம்! யமுனா சின்னத்துரை!

வெயில் எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை யமுனா சின்னத்துரை. இவர் அதனை தொடர்ந்தும் வசந்தம் வந்தாச்சு மற்றும் தீபாவளி ஆகிய படங்களில் நடித்திருந்தார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழிலும் யாரடி நீ மோஹினி எனும் பிரபல தொடரில் பேயாக நடித்து வருகிறார்.

தற்போதும் சேசிங் எனும் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்நிலையில், இவர் அண்மையில் பேசிய போது, தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் எவ்வளவோ தியாகம் செய்கிறார்கள். நாம் அவர்களின் இனிஷியலை மட்டும் எழுதக்கூடாது. அவர்களின் முழு பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம். அதனால் தான் சின்னத்துரை என நான் எனது தந்தையின் பெயரை முழுவதுமாக சேர்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

From around the web