விஷாலுடன் முதன் முறையாக கைகோர்க்கும் பிரபல நடிகை..!!

 
விஷாலுடன் முதன் முறையாக  கைகோர்க்கும் பிரபல நடிகை..!!

நடிகர் விஷால் செல்லமே எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இவர் அடுத்து நடித்து வரும் துப்பறிவாளன்-2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இதை தொடர்ந்து ‘சக்ரா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இதன் பிறகு இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தில் விஷாலுக்கு ஹீரோயினாக தெலுங்கு சினிமாவின் நடிகை ரிது வர்மா நடிக்கவுள்ளாராம்.

இவர் தற்போது விக்ரம் நடித்துவரும் ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ஆகிய படங்களில் நடிகையாக நடித்து வருகிறார்.

From around the web