அரிசி மூட்டைகளை நிதியாக வழங்கிய பிரபல நடிகர்..!

 
அரிசி மூட்டைகளை நிதியாக வழங்கிய பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் தற்போது நடித்து வெளியான திரைப்படம் ஜிப்ஸி.இந்த படத்தை ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ஸி படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்திருந்தார்.

கொரனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், Film Employees Federation of South India(FEFSI)  நிறுவனத்தில் பணிபுரியும் 10000க்கு மேற்பட்டோர் தினசரி வேலைக்கு சென்று தினசரி சம்பளம் வாங்கி வாழ்க்கையை நடத்துபவர்கள் ஆவர்.

தற்போது அவர்களது வாழ்க்கை வேலைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது . எனவே அவர்களுக்கு உதவி செய்ய கோரி பெப்சியின் தலைவரான ஆர்கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரனாவால் மூடப்பட்ட FEFSI நிறுவன ஊழியர்களுக்கு உதவி தொகையாகவும், சிலர் அவர்களின் பசியை போக்குவதற்கு அரசி மூட்டையை வழங்கியதையும்  நாம் அறிவோம் . இந்த நிலையில் தற்போது ஜீவா அவர்கள்  வேலையில்லாமல் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும்  பெப்சி நிறுவன ஊழியர்களுக்கு 275 பேக்ஸ் அரிசி மூட்டைகளை  நிதியாக வழங்கியுள்ளார்.

From around the web